திருவையாறில், ஜமாபந்தி
திருவையாறில், ஜமாபந்தி இன்று தொடங்குகிறது
திருவையாறு;
திருவையாறு தாலுகாவில் ஜமாபந்தி தஞ்சை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா தலைமையில் இன்று(வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் இன்று( வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நடுக்காவேரி சரகத்துக்கு உட்பட்ட திருவாலம்பொழில், நடுக்காவேரி கிழக்கு, நடுக்காவேரி (மேற்கு), கருப்பூர், கோனேரிராஜபுரம், மன்னார்சமுத்திரம், ஈஸ்வரன்கோவில்பத்து, வரகூர், அள்ளுர், அம்பதுமேல்நகரம் மற்றும் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது. 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கண்டியூர் சரகத்துக்கும், 17-ந்தேதி (புதன்கிழமை) அன்று திருவையாறு சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. 3 நாள் நடைபெறும் ஜமாபந்தியில் தஞ்சை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா அனைத்து கிராம கணக்குகளையும் ஆவணங்கள், பதிவேடுகளையும் தணிக்கை செய்கிறார்.இந்த தகவலைதிருவையாறு தாசில்தார் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.