தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை குறைப்பு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
திமுக ஆட்சியில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக ஆட்சியில்16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சீர்த்திருத்தங்களை அமல்படுத்தி, கொரோனா தொற்று, இயற்கை பேரிடர் மற்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தி காட்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியால் ஏற்றப்பட்ட வருவாய் பற்றாக்குறை 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story