ரூ.21 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்


ரூ.21 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
x
தினத்தந்தி 15 May 2023 12:30 AM IST (Updated: 15 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ரூ.21 லட்சத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கங்கா, விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் புதூரில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தையும் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தில் கடந்த 12-ந் தேதி விளையாடச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன், அருண்குமார் மற்றும் சுதன் ஆகிய 3 பள்ளி மாணவர்கள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதி உதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அப்போது, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் உடனுறை குருநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு பிரதான ஹோமம், காலை 9.40 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், விமான கோபுரத்திற்கும் உடுப்பி ராமகிருஷ்ணன் உபாத்யாயா குழுவினரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் கோவில்பட்டி நகர செயலாளரும், நகரசபை தலைவருமான கா.கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கே. சந்திரசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனா். இரவில் அங்காள பரமேஸ்வரி அம்மன்- குருநாதர் வீதி உலா வருதல் நடைபெற்றது.


Next Story