வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முனியனின் பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய சங்க செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட முழுவதும் 200 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் சிவகாசி ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் போராட்டத்தால் பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காக தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்