கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சாயல்குடி,
கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பணிகள் குறித்து முன்னேற்ற அறிக்கை தொடர்பாக ஒப்பந்ததாரர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் உதவி இயக்குனர் தணிக்கை அருள் சேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் நடக்கும் பணிகள் விரைந்து செயல்படுத்திட வலியுறுத்தப்பட்டது. ஊருணிகளில் தண்ணீர் இருப்பதால் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது தண்ணீர் வற்றியவுடன் ஊருணி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரம் ஒருமுறை ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெறும் நான் மறுமலர்ச்சி திட்டத்தில் சாலை பணிகளை 100 சதவீதம் நான்கு நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும். உள்ளிட்டவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய மேலாளர் முரளிதரன், ஆனந்தகுமார், பொறியாளர்கள் பழனி குமார், ஆனந்தவேல், ஈஸ்வரன் உள்ளிட்ட ஒப்பந்ததாரர்கள் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.