வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x

வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டில் 46 பஞ்சாயத்துகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்துகளில் சாகுபடி செய்யாத 15 ஏக்கர் வரை தரிசாக உள்ள தொகுப்பு நிலங்கள் 80 அடையாளம் கண்டறியப்பட்டன. கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நிலத்தொகுப்பில் பயிர் சாகுபடி செய்வதை ஆராய்ந்து சாகுபடி செய்யப்படும் பயிர்களின் அவற்றின் மூலம் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் கிடைக்கும் வருமானத்தை உறுதி செய்யும் வகையில் திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இதில், வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குனர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story