அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு கூட்டம்


அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு கூட்டம்
x

அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் கட்டுப்பாட்டில் அரசு கட்டிடத்தில் 662 அங்கன்வாடி மையங்கள், வாடகை கட்டத்தில் 171 மையங்கள், இலவச கட்டிடத்தில் 135 மையங்கள் என மொத்தம் 968 மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 686 மையங்களில் தண்ணீர் வசதி, 757 மையங்களில் சமையலறைகளில் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்திடவும், 199 மையங்களில் சிறிய பழுது சரிசெய்திடவும், 87 மையங்களில் பெரிய பழுது சரிசெய்திடவும் வேண்டும்.

பழுது பார்த்தல்

76 மையங்களில் முழுவதும் பழுது சரிசெய்திடவும், 127 மையங்களில் மின்சார வசதி ஏற்படுத்திடவும், 61 மையங்களில் மின் விளக்கு அல்லது மின் விசிறி மட்டும் இயங்குவதை சரிசெய்தல், 261 மையங்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்திடவும், 434 மையங்களில் கழிப்பிட அறைகளில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தல் ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய வேண்டும். அதேபோன்று ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் திட்ட அலுவலர் ஸ்டெல்லா, உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ்குமார், பழனிசாமி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story