வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தபடும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அங்கன்வாடி கட்டிடங்களின் கட்டுமான பணிகள், சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள், தடுப்பணைகள், கழிவுநீர் கால்வாய்கள், சிறு பாலங்கள், பள்ளி சுற்றுச்சுவர், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உலக சுற்றுச்சுழல் தினத்தன்று 1 லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது' என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, உதவி திட்ட அலுவலர்கள் ஆப்தாப்பேகம், செல்வன் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.