கல்லூரி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
கல்லூரி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) இளங்கோ வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் எழிலி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
கவிதை போட்டியில் முதலிடத்தை சத்யபிரியா (திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி), 2-வது இடத்தை அபாரணி (அவினாசி அரசு மகளிர் கல்லூரி), மூன்றாம் இடத்தை சிவாத்தாள் (முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி) ஆகியோர் வென்றனர். கட்டுரைப்போட்டியில் முதலிடத்தை கீதாஸ்ரீ (திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி), 2-வது இடத்தை முத்துலட்சுமி (திருமுருகன்பூண்டி ஏ.வி.பி.கலைக்கல்லூரி), 3-வது இடத்தை ஜெனிபர் (திருப்பூர் குமரன் கல்லூரி) ஆகியோர் பெற்றனர்.
பேச்சுப்போட்டியில் முதலிடத்தை விஷ்ணுபிரியா (உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி), 2-வது இடத்தை விஜி (திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி), 3-வது இடத்தை பிருந்தா (திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி) ஆகியோர் வென்றனர். முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் கலெக்டர் மூலமாக வழங்கப்பட உள்ளது. முடிவில் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் நந்தினி நன்றி கூறினார்.