ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி


ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி
x

ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத, படிக்க தொியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை பயிற்றுவிக்கும் நோக்கில் மாவட்டத்தில் 18,142 பேர் கண்டறியப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயில்வோருக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14 ஒன்றியங்களில் வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி திருப்பூர் கே.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட உதவித்திட்ட அலுவலர் இலி.அண்ணாதுரை தொடங்கி வைத்து விளக்கவுைர ஆற்றினார்.



Next Story