காரிமங்கலம் அருகே சாலையோரம் பதுக்கப்பட்ட 1½ ரேஷன் அரிசி பறிமுதல்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் காரிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரிமங்கலம் அருகே உள்ள பொம்மஅள்ளி பகுதியில் சாலையோரத்தில் உள்ள புதரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கு பதுக்கப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு பாலக்கோடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசி மூட்டைகளை அங்கு பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story