அரிசி வியாபாரி தற்கொலை


அரிசி வியாபாரி தற்கொலை
x

வேடசந்தூரில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அரிசி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 37). இவருக்கு திருமணமாகி ஜெயப்பிரியா (28) என்ற மனைவியும், சாருதேஸ்வி (6) என்ற மகளும் உள்ளனர். சரவணக்குமார் கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜிநகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெயிண்டராக வேலை செய்து வந்த அவர், அரிசி வியாபாரமும் செய்தார்.

இந்தநிலையில் அரிசி வியாபாரத்தில் சரவணக்குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சரவணக்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே நேற்று காலை ஜெயப்பிரியா எழுந்து பார்த்தபோது, கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சரவணக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story