உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு


உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
x

உற்பத்தி குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல்,

நொய்யல், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், புன்னம்சத்திரம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர், கவுண்டன்புதூர், மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் சவ்வரிசி தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு மரவள்ளி கிழங்கில் இருந்து பல ரகமான சவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. கடந்த வாரம் மில் அதிபர்கள் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். தற்பொழுது டன் ஒன்று ரூ.9,500-க்கு வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் சிப்ஸ் தயாரிப்பாளர்கள் மரவள்ளி கிழங்கை கடந்த வாரம் டன் ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். இந்த வாரம் டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்குக்கு வாங்கிச் செல்கின்றனர். வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story