வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்


வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
x

அருப்புக்கோட்டை சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

வேகத்தடை இல்லை

அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பிலிருந்து எஸ்.பி.கே. பள்ளி சாலை வழியாக புறவழிச்சாலைக்கு தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் வேகத்தடை எதுவும் இல்லை. ஆதலால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகமாக செல்கின்றன. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பில் இருந்து எஸ்.பி.கே. பள்ளி சாலை வழியாக புறவழிச்சாலைக்கு இரு சக்கரம், கார், லாரி, கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

விபத்து அபாயம்

ஆதலால் இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக இருக்கும். இந்தநிலையில் இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். எனவே மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story