அறுந்து கிடக்கும் ஒயர்களால் விபத்து அபாயம்
அறுந்து கிடக்கும் ஒயர்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி ஊராட்சி 30 அடி வீதியில் இண்டர்நெட் கேபிள் ஒயர்கள் அறுந்து சாலையில் தொங்குகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பாளையம்பட்டி ஊராட்சி 30 அடி வீதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் இண்டர்நெட் கேபிள் ஒயர்கள் அறுந்து தொங்குகின்றன. இதனால் இரவு நேரங்களில் ஒயர்கள் இருப்பது தெரியாமல் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதேபோன்று வயல்கள் வழியாகவும் இந்த ஒயர்கள் தாழ்வாக செல்வதால்விவசாய பணிகளை மேற் கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையிலும், விளைநிலங்களிலும் அறுந்து கிடக்கும் ஒயர்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.