கழிவுநீர் கால்வாயில் சிமெண்டு பலகைகள் உடைந்து கிடப்பதால் ஆபத்து


கழிவுநீர் கால்வாயில் சிமெண்டு பலகைகள் உடைந்து கிடப்பதால் ஆபத்து
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கழிவுநீர் கால்வாயில் சிமெண்டு பலகைகள் உடைந்து கிடப்பதால் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கழிவுநீர் கால்வாயில் சிமெண்டு பலகைகள் உடைந்து கிடப்பதால் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

கழிவுநீர் கால்வாய்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்காலில் நெடுஞ்சாலையின் இரு ஓரங்களிலும் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு கழிவு நீர் கால்வாய் உள்ளது.

இந்த கழிவுநீர் கால்வாய் சிமெண்டு கான்கிரீட் பாலத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் மேல் மூடப்பட்டுள்ள சிமெண்டு பலகைகள் பல இடங்களில் உடைந்து கிடக்கிறது.

சுகாதார சீர்கேடு

இதுபோன்ற உடைப்பு ஏற்பட்ட இடங்களில் கால்வாயில் குப்பை தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாவதால், மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தற்போது காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றி கிடப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் சிமெண்டு பலகைகள் உடைந்து கிடக்கும் பகுதியில் கால்வாய்க்குள் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடையும் ஆபத்தும் உள்ளது.

சாலை மறியல்

பல வாகனங்கள் சிமெண்டு பலகை உடைந்த பகுதியில் கால்வாய்க்குள் சிக்கி உள்ளன. இது குறித்து தைக்கால் வியாபாரிகள் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த கால்வாய் பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தைக்கால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளதாகவும் தைக்கால் வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா தெரிவித்தார்.


Next Story