பிதிர்காடு அருகே நெடுஞ்சாலையில் ஓடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பிதிர்காடு அருகே நெடுஞ்சாலையில் ஓடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பந்தலூர்
பந்தலூர் தாலுகா பிதிர்காடு அருகே காமராஜ்நகரில் பாட்டவயல் செல்லும் சாலைக்கு மேல்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். அந்த குடியிருப்பு பகுதிகளிலிருந்து கழிவுநீரும் இறைச்சி உள்ளிட்ட கழிவுபொருட்களும் அடித்து செல்லப்பட்டு நெடுஞ்சாலையில் கலக்கிறது. சாலையோரத்தில் உள்ள சிறுபாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீரும் மழைவெள்ளமும் தேங்கிகுளம் போல் காட்சி அளிக்கிறது. இந்தசாலை வழியாகதான் பொதுமக்களும், பள்ளிகல்லூரி மாணவிகளும் அங்கன்வாடி குழந்தைகளும் நடந்து செல்கின்றனர். இதனால் நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் கூடலூரிலிந்து நெலாக்கோட்டை வழியாகவும் பந்தலூர், பிதிர்காடு வழியாகவும் பாட்டவயல் சுல்த்தான்பத்தேரிக்கும், அய்யன்கொல்லிக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையை போக்க குடியிருப்புகளின் அருகிலும் சாலைஓரங்களிலும் கழிவுநீர் கால்வாய் கட்டவேண்டும். சிறுபாலத்தை தூர்வாரவும் அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்களும் சமூகநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.