பந்தலூர் அருகே நீரோடையில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பந்தலூர் அருகே நீரோடையில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
பந்தலூர்
பந்தலூர் அருகே நீரோடையில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
நீரோடையில் கழிவுநீர்
பந்தலூரிலிருந்து தாலுகா அலுவலகம் வழியாக காலனி பகுதிக்க செல்லும் சாலை உள்ளது. காலனியைஒட்டி நீரோடை செல்கிறது. இந்த நீரோடையில் மழை காலங்களில் மழை வெள்ளம் நிரம்பி வீடுகளுக்குள் புகுந்துவிடும். சாலையிலும் மழைநீர் தேங்கி நிற்கும். இதனால் தனியார் வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் ஆட்டோக்களும் செல்ல முடியாத நிலையும் ஏற்படும். பொதுமக்களும் -மாணவிகளும் வெள்ளத்தில் தத்தளித்துதான் செல்லவேண்டும். இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சிறுபாலத்திற்கும் கீழ்பகுதியில் நெல்லியாளம் நகராட்சியில் நீரோடைகளின் இடையே வெள்ளம் செல்ல பெரிய கால்வாய் கட்டப்பட்டது. நீரோடையில் செல்லும் வெள்ளம் அட்டி வழியாக பொன்னானி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்று நீரை பொன்னானி அம்பலபாடி, அம்பலமூலா, வட்டகொல்லி, வெள்ளேரி உள்படந ெலாக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
நோய் பரவும் அபாயம்
இந்தநிலையில் பந்தலூர் காலனி அருகே கட்டப்பட்ட நீரோடையின்
கால்வாயில் குப்பைகளும் கழிவுகளும் கலக்கிறது. அந்த கழிவுகள் பொன்னானி ஆற்றுநீரில் கலக்கிறது. இதால் குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையை போக்க நீரோடையில் குப்பை மற்றும் கழிவுகள் கலப்பதை தடுக்கவும் மேல்மூடி அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.