கலங்கலான நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம்

கலங்கலான நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம்
x

திருத்துறைப்பூண்டி அருகே கலங்கலான நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, கிணற்றை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே கலங்கலான நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, கிணற்றை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிணற்று தண்ணீர்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை ஊராட்சியில் சேவியக்காடு மற்றும் கொருக்கை இடையே 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்ட தொண்டிகுளம் என்னும் கிணறு தண்ணீர்தான் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த கிணற்று தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

நோய் பரவும் அபாயம்

இந்த கிணறு நீண்டகாலமாக தூர் வாரப்படாததால் அதில் உள்ள தண்ணீர் மாசு அடைந்துள்ளது. வேறு வழியின்றி இந்த கிணற்று தண்ணீரை இறைத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த கிணற்றை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த தண்ணீர் மிகவும் கலங்கலாக குடிப்பதற்கே தகுதி அற்றதாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. ஆகவே, இந்த கிணற்றை தூர்வாரி எங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.திருத்துறைப்பூண்டி அருகே கலங்கலான நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, கிணற்றை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிணற்று தண்ணீர்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை ஊராட்சியில் சேவியக்காடு மற்றும் கொருக்கை இடையே 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்ட தொண்டிகுளம் என்னும் கிணறு தண்ணீர்தான் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த கிணற்று தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

நோய் பரவும் அபாயம்

இந்த கிணறு நீண்டகாலமாக தூர் வாரப்படாததால் அதில் உள்ள தண்ணீர் மாசு அடைந்துள்ளது. வேறு வழியின்றி இந்த கிணற்று தண்ணீரை இறைத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த கிணற்றை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த தண்ணீர் மிகவும் கலங்கலாக குடிப்பதற்கே தகுதி அற்றதாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. ஆகவே, இந்த கிணற்றை தூர்வாரி எங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story