வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம்


வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம்
x

பஸ் நிறுத்தத்தில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

விருதுநகர்


விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மீனாம்பிகை பஸ் நிறுத்தத்திற்கு மதுரையில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்களும், சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் பஸ்களும் வந்து செல்கின்றன. இந்த பஸ்கள் எதிரும் புதிருமாக நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. இதனால் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் மதுரையில் இருந்து வரும் பஸ்களை நீலாம்பிகை பஸ் நிறுத்தத்தின் வடபுறம் ஒரு பகுதியிலும், சிவகாசியில் இருந்து வரும் பஸ்களை மேல்புறம் ஒரு பகுதியிலும் நிற்க ஏற்பாடு செய்வதுடன் பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



Next Story