ஆபத்தான நிலையில் ஆற்றுப்பால தடுப்புச்சுவர்


ஆபத்தான நிலையில் ஆற்றுப்பால தடுப்புச்சுவர்
x

பழனி அருகே மானூரில், ஆற்றுப்பால தடுப்புச்சுவர் இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளது. சீரமைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல்

ஆற்றுப்பாலம்

பழனியை அடுத்த மானூரில், சண்முகநதியின் குறுக்கே ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. பழனியில் இருந்து மானூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள், தாராபுரம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட வெளியூருக்கு செல்லும் வாகனங்கள் இந்த ஆற்றுப்பாலம் வழியாக செல்கின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தின் தடுப்புச்சுவர் மற்றும் தூண்கள் பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. குறிப்பாக பாலத்தின் பல பகுதியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து விட்டது. தடுப்புச்சுவரில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

பாலம் சேதம் அடைந்துள்ளதால், அதன் வழியாக செல்ல வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த ஆற்றுப்பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து போதிய பராமரிப்பு செய்ய வேண்டும் அல்லது புதிய பாலம் அமைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரமைப்பு பணி

இதுகுறித்து பொதுக்கள் கூறுகையில், மானூர் ஆற்றுப்பாலத்தின் பல இடங்களில் தடுப்புச்சுவர் முற்றிலும் சேதமடைந்து விட்டது. இதனால் அந்த தடுப்புச்சுவர் எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. பாலத்தின் பல இடங்களில் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளதால் விரிசல் அதிகமாகி வருகிறது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மானூர் ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்து சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் அல்லது புதிய பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story