குடியிருப்புகளை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது


குடியிருப்புகளை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது
x

குடியிருப்புகளை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது

மயிலாடுதுறை

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருகரைகளையும் தொட்டு ஆர்ப்பரித்து செல்கிறது. கடந்த 2 நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர கிராம மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களை தேடிச்சென்று வருகிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் தற்போது 2½ லட்சம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால் நாதல்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு திட்டு, காட்டூர், சரஸ்வதி விளாகம், வடரெங்கம், வாடி உள்ளிட்ட ஆற்றுப்படுகை கிராமங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.


Next Story