"கவர்னர் பதவியில் இருக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை.." வைகோ பேட்டி!
கவர்னர் பதவியில் இருக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை,
கவர்னர் பதவியில் இருக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, "தமிழ்நாடு ஆளுநர் பேசுவது உளறல் மேல் உளறலாக உள்ளது; அவர் கவர்னர் பதவிக்கு லாயக்கற்றவர்.
காவல்துறையில் காலாவதியான அவர், இங்கு வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார்; கவர்னர்பதவியில் இருக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் வேண்டுமானால் பாஜக, இந்து அமைப்புகளுக்குப் பிரதிநிதியாக இருக்கலாம்" என்றார்.
Related Tags :
Next Story