திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் சாலை பணிகள் மந்தகதி


திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் சாலை பணிகள் மந்தகதி
x

திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் சாலை பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது

திருப்பூர்

திருப்பூர் குமரன் ரோட்டில் இருந்து ஊத்துக்குளி ரோடு, லட்சுமி நகர், கொங்கு மெயின் ரோடு செல்வதற்கு முக்கிய இணைப்பு சாலையாக கோர்ட்டு ரோடு உள்ளது. வங்கிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவலர் குடியிருப்பு, குடியிருப்புகள், தனியார் அலுவலகங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

மேலும் வடக்கு பகுதிக்கு செல்வதற்கு டி.எம்.எப். தரைப்பாலம் வழியாக செல்லும் இணைப்பு சாலையாக இருப்பதாலும் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது. மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடந்த இந்த சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கான்கிரீட் தளத்துடன் சாலையாக மாற்றப்படுகிறது.

மந்தகதியில் சாலைப்பணி

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோர்ட்டு சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக போடும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலமாக பிள்ளையார் கோவில் முன்புறம் இருந்து ராஜவீதி சந்திப்பு வரை சாலை தோண்டப்பட்டுள்ளது. பின்னர் கற்கள் போட்டு சீரமைக்கும் பணி மந்த கதியில் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதன்காரணமாக ராஜவீதி, வாலிபாளையம் முருகன் கோவில் வீதியில் குறுகிய சாலை வழியாக வாகனங்கள் சென்று வருவதால் வாகன நெரிசல் தினமும் ஏற்பட்டு வருகிறது.

கோர்ட்டு ரோட்டில் குடியிருப்பவர்கள் சுற்றி செல்லும் நிலை தொடர்கிறது. தற்போது வரை பணிகள் மந்தகதியில் நடப்பதால்1 மாதத்தில் பணிகளை முடிப்பது நிறைவேறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன நெரிசலை குறைப்பதற்காக, இந்த சாலையை துரிதகதியில் அமைக்க வேண்டும். வடக்கு, தெற்கு பகுதிக்கு செல்லும் முக்கிய இணைப்பு சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story