குண்டும்,குழியுமான சாலையால் வாகன ஓட்டிக்ள அவதி
குடிமங்கலம், மே.10-
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ணைக்கிணர் ஊராட்சி. பண்ணைக்கிணர் ஊராட்சியில் பண்ணைக்கிணர், கோழிகுட்டை, ஜல்லிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பண்ணைக்கிணர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பண்ணைக்கிணர் ஊராட்சி எதிரே சாலை குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. மேலும் பிரதான சாலையில் இருந்து தெருக்களுக்கு செல்லும் சாலை உயரம் குறைந்து காணப்படுகிறது.
சாலையையொட்டி கழிவுநீர் கால்வாய் செல்லும் நிலையில் மழைக் காலங்களில் இப்பகுதியில் உள்ள மக்கள் செல்ல முடியாத நிலையில் மழை நீர் தேங்கி விடுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பண்ணைக்கிணர் ஊராட்சி அலுவலகம் எதிரே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். பண்ணைக்கிணர் ஊராட்சி எதிரே உள்ள சாலையில் கழிவுநீர் செல்லும் வகையில் குழாய் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.