குண்டும் குழியுமான சாலை
தாராபுரம்-கொட்டாபுளிபாளையம் இடையே உள்ள சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
குண்டும் குழியுமான சாலை
தாராபுரத்தில் இருந்து கொட்டாபுளிபாளையம் செல்லும் சாலை ஒன்று உள்ளது. அந்த சாலை வழியாக கொட்டாபுளிபாளையம், மகாலட்சுமி நகா், கே.சி.பி. நகா், எஸ்.வி.வி. எஸ். நகா், லட்சுமி நகா், கொண்டரசம் பாளையம், உதயம் நகா் உட்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த ஏராளமான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தாராபுரம் நகா், பஸ்நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனா். அது போன்று தாராபுரம் நகாில் வசிக்கும் பலா் தங்கள் தோட்டங்களுக்கு சென்றுவர இந்த சாலையை பயன்படுத்துகின்றனா். இந்த சாலையில் எப்போதும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும்.
அந்த சாலையில் கொண்டரசம்பாளையம் பிாிவில் சாலை முற்றிலும் பெயா்ந்து அரை அடி ஆழத்திற்கு பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. தற்போது தாராபுரம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் அந்த பள்ளங்களில் மழைநீா் நிரம்பி நிற்கிறது. இதனால் அந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. அதுபோன்று அந்த சாலையில் இருந்து கொண்டரசம்பாளையம் செல்லும் சாலையும் முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
அந்த சாலைகளையும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாாிகளுக்கு புகாா் தொிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சாலைகளை சாிசெய்து தரவேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.