தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானாா்கள்.
காட்டுமன்னார்கோவில்,
குமராட்சி அருகே தெம்மூர் பெரிய தெருவை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 28), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மோனிஷா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். அஜித்குமார் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் வெண்ணையூர் கிராமத்தில் இருந்து தெம்மூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். புளியங்குடி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே மாடு வந்தது. இதனால் மாடு மீது மோதாமல் இருப்பதற்காக அஜித்குமார் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அஜித்குமார் பலத்த காயமடைந்தார்.
இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜித்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்தவர் நீலாவதி(58). சம்பவத்தன்று இவர் ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நீலாவதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்