வேளாண்மை பொறியியல் துறை ஊழியர் சாவு
திருவிடைமருதூர் அருகே லோடு வேன் மோதி வேளாண்மை பொறியியல் துறை ஊழியர் உயிரிழந்தார்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் செட்டி மண்டபம், உமா மகேஸ்வரபுரம், கோ ஆப்பரேட்டிவ் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட் ஜான்சன் (வயது56) இவர் திருபுவனம் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். புளியம்பட்டை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை நோக்கி வந்த மினி லோடு வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரிச்சர்ட் ஜான்சனை அக்கம்பக்கத்தினா் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.