படுகாயமடைந்தவர் சாவு


படுகாயமடைந்தவர் சாவு
x

தஞ்சை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

2 கார்கள் மோதல்

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரத்தை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் தஞ்சை வந்து விட்டு மீண்டும் திருவோணம் நோக்கி கடந்த 18-ந் தேதி சென்று கொண்டு இருந்தனர். தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் நாஞ்சிக்கோட்டை அருகே இந்த காரும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இந்த விபத்தில் ஊரணிபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த தி.மு.க. சிறுபான்மைப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளரான சேட்முகமது (வயது65), ஊரணிபுரம் காமராஜ் நகரை சேர்ந்த தி.மு.க. நகர செயலாளரான சஞ்சய் காந்தி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த ஊரணிபுரம் புதுவிடுதியை சேர்ந்த சுந்தர் (50) தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் ஒருவர் சாவு

மேலும் ஊரணிபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜா (42), காமராஜ் நகரை சேர்ந்த ரமேஷ் (40), மற்றொரு காரில் வந்த டிரைவரான மன்னார்குடி மேலவாசல் சோழன்நகரை சேர்ந்த சிவபுண்ணியம் மகன் கவுதமன் (36), மன்னார்குடி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் மணிகண்டன் உள்பட 6 பேர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ராஜா நேற்றுஅதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story