நகைக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் சாவு


நகைக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் சாவு
x

திருத்துறைப்பூண்டி அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 2 போ் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர்

கோட்டூர்;

திருத்துறைப்பூண்டி அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 2 போ் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நகைக்கடை உரிமையாளர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு அருகே உள்ள சேனாதிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது 33). இவர் வாய்மேட்டில் நகைக்கடை வைத்து உள்ளார்.இவருடைய நண்பர் பஞ்சநதிக்குளம் தென்னடார் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(43). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டியில் உள்ள நகைக்கடைக்கு சென்று பணம் கொடுத்துவிட்டு மீண்டும் தங்களது ெசாந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றனர்.

பரிதாப சாவு

கட்டிமேடு ஆதிரங்கம் வளைவில் இவர்கள் சென்றபோது எதிரே ஆதிரங்கம் நாகலுடையான் இருப்பு கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன்(22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஈஸ்வரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், நகைக்கடை உரிமையாளர் பாலாஜி மற்றும் காா்த்திகேயன் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈஸ்வரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஈஸ்வரன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் நேற்று உயிரிழந்தார். காா்த்திகேயன் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story