கார் மோதி முதியவர் சாவு


கார் மோதி முதியவர் சாவு
x

குடவாசல் அருகே கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.

திருவாரூர்

குடவாசல்;

குடவாசல் அருகே உள்ள செல்லூர் தோப்புதெருவை சேர்ந்தவர் அய்யாறு (வயது70). நேற்று தனது பணியை முடித்து விட்டு அய்யாறு வீட்டுக்கு திரும்பி மெயின் ரோட்டுக்கு சென்றாா். அப்போது குடவாசல் பகுதியில் இருந்து வந்த ஒரு கார் அய்யாறு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்து கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து அய்யாறு மகன் சத்தியராஜ் குடவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story