வாலிபர் பலி; நண்பர் படுகாயம்


வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
x

திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தாா். நண்பர் படுகாயம் அடைந்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தாா். நண்பர் படுகாயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மகன் கோட்டைச்செல்வம்(வயது 26). இவரும் அதே ஊரை சேர்ந்த முத்துராஜன் மகன் போத்திராஜன்(22) என்பவரும் நேற்று மாலை திருவோணத்தை அடுத்துள்ள இடையாத்தி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர்.பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை கோட்டைச்செல்வம் ஓட்டினார். போத்திராஜன் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

லாரி மோதியது

இவர்கள் பட்டுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் நெய்வேலி தென்பாதி மணக்கொல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் லோடு ஏற்றி வந்த லாரி கோட்டைச்செல்வம் ஒட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த கோட்டைச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த போத்திராஜன் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story