தவறி விழுந்து காயமடைந்த வாலிபர் சாவு


தவறி விழுந்து காயமடைந்த வாலிபர் சாவு
x

முத்துப்பேட்ைட அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் ஜெயபால்(வயது18). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில்ஆலங்காடு கிராம நிர்வாக அலுவலகம் சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெயபால் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story