பல்லடம் கடைவீதியில் நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல்


பல்லடம் கடைவீதியில் நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
x

பல்லடம் கடைவீதியில் நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

திருப்பூர்

பல்லடம்

பல்லடத்தில் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து பல்லடம் கடைவீதியில் நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பல்லடம் கடைவீதியில், ஆயுத பூஜையை முன்னிட்டு நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்த வந்தனர். இந்த நிலையில, பல்லடம் நகராட்சி அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்பதால் நடைபாதை கடைகளை போடக்கூடாது எனக் கூறி கடைகளை அப்புறப்படுத்த முயன்றனர்.

மேலும் நடைபாதை வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்களை பயன்படுத்தி நகராட்சி வாகனத்தில் கொண்டு செல்ல முயன்றனர். இதன் காரணாக சாலை யோர நடைபாதை வியாபாரிகளுக்கும் பல்லடம் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலை மறியல் போராட்டம்

முக்கியமான பண்டிகை காலங்களில் கடைகளை போடக்கூடாது என தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடைபாதை வியாபாரிகளுடன், பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை போக்குவரத்திற்கு இடையூறுயில்லாமல் ஓரமாக போட அறிவுறுத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.



Next Story