கூட்டுறவு சங்க முறைகேடுகளை கண்டித்து சாலை மறியல்
கூட்டுறவு சங்க முறைகேடுகளை கண்டித்து சாலை மறியல் நடந்தது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும், அதில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அருந்தவம்புலம் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, நிர்வாகிகள் லதா, ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.