ராணிப்பேட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் நகர செயலாளர் கே.பி.சந்தோஷ் தலைமையிலும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் முன்னிலையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி கைது செய்ததை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் நகர செயலாளர்கள் மோகன், முகம்மது இப்ராஹிம் கலிலுல்லா, ஒன்றிய செயலாளர்கள் வி.கே.ராதாகிருஷ்ணன், தேவேந்திரன், பேரூராட்சி செயலாளர் தினகரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 61 பேரை ராணிப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் கைது செய்தனர்.
கலவை
திமிரி ஒன்றிய கிழக்கு செயலாளர் சொரையூர் குமார் தலைமையிலும், கலவை பேரூர் செயலாளர் சதீஷ் முன்னிலையிலும் கலவை பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனையடுத்து கலவை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர்.
அரக்கோணம்
அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஷியாம்குமார், ஒன்றிய செயலாளர் பிரகாஷ், அரக்கோணம் நகராட்சி கவுன்சிலர்கள் ஜெர்ரி, பாபு, சரவணன், ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சோளிங்கர்
சோளிங்கர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்ததை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதில் மாவட்ட நிர்வாகி ஏ.ல்.சாமி, காவேரிப்பாக்கம் மற்றும் நெமிலி பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.