பா.ஜ.க.வினர் சாலை மறியல்


பா.ஜ.க.வினர் சாலை மறியல்
x

பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுட்டனர்.

பெரம்பலூர்

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, பெரம்பலூரில் புறநகர் பஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

இதனைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர்.


Next Story