கீழையூரில், லாரி உரிமையாளர் சங்கத்தினர் சாலை மறியல்
குறிப்பிட்ட நேரத்தில் மணலை இறக்காததால் லாரியை பறிமுதல் செய்ததை கண்டித்து கீழையூரில், லாரி உரிமையாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி:
குறிப்பிட்ட நேரத்தில் மணலை இறக்காததால் லாரியை பறிமுதல் செய்ததை கண்டித்து கீழையூரில், லாரி உரிமையாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி பறிமுதல்
கீழையூர்ஒன்றியம் திருப்பூண்டியில் கீழையூர் போலீஸ் சார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது தஞ்சாவூர் மாவட்டம் கோவிந்தநாட்டுசேரி பகுதியில் உள்ள மணல் குவாரியில் இருந்துலாரியில் மணல் ஏற்றிக்கொண்டு திருப்பூண்டி அருகே வந்தபோது லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். இதில் குறிப்பிட்ட நேரத்தில் மணலை இறக்காமல் வந்ததாக கூறி லாரியை பறிமுதல் செய்து டிரைவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர் சங்கத்தினர் பறிமுதல் செய்த லாரியை விடுக்கக்கோரி கீழையூர் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மணல் ஏற்றி இறக்கவேண்டும் என அறிவுரை கூறி பறிமுதல் செய்யப்பட்ட லாரியையும், டிரைவரையும் விடுவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சாலை மறியலால் நாகை -திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.