தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
செஞ்சி அருகே தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே வீரணாமூர் கிராமத்தை சேர்ந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு சரியான முறையில் வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னா் அவர்கள் தங்களுக்கு சாியான முறையில் வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் போில் செஞ்சி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன், வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி மற்றும் போலீசார் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேலை வழ்ங்க உாிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.