பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்


பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்
x

பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் மத்திய அரசின் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், தேனி உள்பட பல்வேறு நகரங்களில் சோதனை நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கறம்பக்குடி நகர பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுதலை செய்ய கோரியும் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் மண்டல தலைவர் அபுபக்கர் சித்திக் உள்பட 10 பேரை கைது செய்தனர்.


Next Story