ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திண்டிவனம் அருகே ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அரிசி, பருப்பு உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ஊரல் பஸ் நிறுத்தம் அருகே திண்டிவனம்-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் ரோஷனை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று பேராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு சரியான முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story