காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
சாத்தனூர் ஊராட்சியில் ஒருவாரமாக குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே சாத்தனூர் ஊராட்சியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த ஒருவாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் ஆடுதுறை தரங்கம்பாடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் ஆடுதுறை-தரங்கம்பாடி சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து காத்து கிடந்தன.இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story