இழப்பீடு வழங்க கோரி சாலை மறியல்


இழப்பீடு வழங்க கோரி சாலை மறியல்
x

இழப்பீடு வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி

மணப்பாறையை அடுத்த பெரியவெள்ளபட்டியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் தவளவீரன்பட்டி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக இருந்ததோடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் மின்கம்பத்தில் ஏறி மின்சார பணியை மேற்கொண்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இறந்த சின்னதுரை மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட வேண்டும், அவரின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் மணப்பாறை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story