ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்


ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்
x

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி

துறையூர், ஆக.25-

துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டியில் பொது இடத்தை ஒரு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனால் மற்றொரு தரப்பினர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதை ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு தாசில்சாரை கலெக்டர் அறிவுறுத்தினார். இதனிடையே ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியை மட்டும் வருவாய்த்துறையினர் அகற்றியதாக தெரிகிறது. இதைகண்டித்து சிலர் செங்காட்டுப்பட்டி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாவிட்டால் மீண்டும் மறியலில் ஈடுபடுவோம் என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story