நாங்குநேரி சுங்கச்சாவடியை கண்டித்து சாலை மறியல் போராட்டம்


நாங்குநேரி சுங்கச்சாவடியை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
x

நாங்குநேரி சுங்கச்சாவடியை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி சுங்கச்சாவடியை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலைமறியல்

நாங்குநேரி அருகே பாணாங்குளத்தில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றி 20 கிலோமீட்டர் வரை உள்ள விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்து வரும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லாமல் கடந்து செல்ல அனுமதிப்பது போன்று நாங்குநேரி சுங்கச்சாவடியிலும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும், ஆனால் இந்த நடைமுறையை பின்பற்றாமல் அடாவடியாக கட்டணங்கள் வசூல் செய்வதாகவும், இதனை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு அமைப்பின் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி தென் மண்டல தலைவர் ராஜ பாண்டியன், புரட்சி பாரதம் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்சன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் வானமாமலை,அ.தி.மு.க. நாங்குநேரி நகர தலைவர் பரமசிவன், ஐ.ஜே.கே ஒன்றிய தலைவர் முத்தையா, பார்வடு பிளாக் குமார், மனித உரிமைகள் காக்கும் கட்சி மாநில அமைப்பு செயலாளர் துர்க்கை லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

70 பேர் கைது

தகவல் அறிந்ததும் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

பாணாங்குளத்தில் போராட்டம் நடத்திய 49 பேரையும், சுங்கச்சாவடி அருகே போராட்டம் நடத்திய 21 பேரையும் போலீசார் கைது செய்து நாங்குநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


Next Story