ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்


ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
x

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது.

திருச்சி

மணப்பாறை:

சாலை மறியல்

மணப்பாறையில் உள்ள பழைய நீதிமன்றம் அருகே புகழ்பெற்ற கால்நடை சந்தை மற்றும் வாரச்சந்தை உள்ளது. சந்தையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் சந்தையின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பு கடை மற்றும் வீடுகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி சார்பில் சுமார் ஒரு மாத்திற்கு முன்பு அறிவிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் ஆக்கிரப்புகள் அகற்றப்படாத நிலையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்தவர்கள் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கிட வேண்டும், மாற்று இடம் வழங்கிட வேண்டும் என்று கூறி சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவகாசம்

இதையடுத்து அவர்களிடம் மணப்பாறை போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் சியாமளா தேவி, நகர்மன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வீடுகளை அகற்றிக்கொள்ள ஒரு வாரம் அவகாசம் வழங்கியதை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story