ரெட்டியார்பட்டியில் ரூ.20 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ரெட்டியார்பட்டியில் ரூ.20 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளையங்கோட்டை ஒன்றியம் பாளையங்கோட்டை தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி பஞ்சாயத்தில் உள்ள ரெட்டியார்பட்டி ஜெ.ஜெ.நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதற்கு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சிமெண்டு சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை தெற்கு வட்டார தலைவர் நளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story