வீரட்டகரத்தில் சாலை அமைக்கும் பணி
25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம்: வீரட்டகரத்தில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரட்டகரம் ஊராட்சியில் அப்பகுதி மக்களின் சுமார் 25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.20 லட்சம் செலவில் வீரட்டகரத்தில் இருந்து மெயின் ரோடு வரை தார் சாலை அமைக்க கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் வசந்தம் வேலு, திருக்கோவிலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் எஸ்.அய்யனார், ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சிஅரசகுமார் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story