குண்டும்,குழியுமான தேசிய நெடுஞ்சாலை
உடுமலை நகராட்சி பகுதியில் பொள்ளாச்சி சாலை-தளி சாலை சந்திப்பு பகுதியில் தானியங்கி சிக்னல் உள்ளது.இந்த சாலைகள் வாகன போக்குவரத்துநிறைந்த தாகும்.இந்த சாலைகள் சந்திப்பு பகுதியில் உள்ள தானியங்கி சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது வாகனங்கள் சாலையில் அதிகம் நின்றிருக்கும்.அந்த வாகனங்கள், பச்சை விளக்கு எரியத்தொடங்கியதும் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.
இந்த நிலையில் அந்த சிக்னல் உள்ள இடத்தில் இருந்து சுமார்50அடி தூரத்தில் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது.அதனால் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள், அந்த இடத்தில் அவசரமாக செல்லும்போது கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குண்டும், குழியுமாக உள்ளஇந்த இடத்தில்சிலர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.அதனால் போக்குவரத்து நிறைந்த அந்த இடத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.