சேதமடைந்த திருநெல்லிக்காவல் கடைவீதி சாலை


சேதமடைந்த திருநெல்லிக்காவல் கடைவீதி சாலை
x

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த திருநெல்லிக்காவல் கடைவீதி சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த திருநெல்லிக்காவல் கடைவீதி சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.

திருநெல்லிக்காவல் சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்திலிருந்து, செருவாமணி வழியாக திருநெல்லிக்காவல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், சேந்தங்குடி, செருவாமணி, திருநெல்லிக்காவல், சினையன்குடி, சூரமங்கலம், கூத்தப்பட்டு, கொளப்பாடு மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் தினமும் சென்று வருகின்றன.

சீரமைக்க கோாிக்கை

திருநெல்லிக்காவல் கடைவீதி சாலையில் மிகவும் ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி மிகவும் சிரமம் அடைகிறார்கள். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறார்கள்.கடந்த பல வருடங்களாக கடைவீதி சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story